தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு
தமிழகத்தில் நாளை முதல் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் கடந்த மே 24 முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து மே 31, ஜூன் 7, ஜூன் 14-ம் தேதி என 3 கட்டமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், தொற்று அதிகமாக இருந்த 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகளும் மீதமுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அதிகமான தளர்வுகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூன் 21) முடிவடைகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
புதிய தளர்வுகள் :
- சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 50% பயணிகளுடன் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி
- சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி
- காய்கறி, பழம், பூ, மளிகை, இறைச்சி கடைகள் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி
- அரசின் அனைத்து அத்தியாவசிய துறைகளும் 100% பணியாளர்களுடன் இயங்கலாம்
- இதர அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்
- தொற்று அதிகமுள்ள கோயம்முத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் இல்லை; நடைமுறையில் உள்ள தளர்வுகளே தொடரும்
