அமெரிக்கா புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்!
உடல்நிலை பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார்.
கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது .
இதே போல் கடந்தமுறை நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை செய்துகொண்டு அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து பின்னர் தமிழகம் திரும்பினார் இது அனைவரும் அறிந்த ஒன்று .
இந்நிலையில் அவர் மீண்டும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்தபோது கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்று வந்துவிட்டது . இதனால் அவரின் அமெரிக்க பயணம் கடந்த ஆண்டு தடைபட்டது. இந்த ஆண்டும் கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகமானதால் அவரால் செல்லமுடியவில்லை.
இந்நிலையில் கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது .

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், தனி விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னையில் இருந்து ரஜினிகாந்த் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி ஒய்வு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினியின் மருமகனான நடிகர் தனுஷ், தி கிரே மேன் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் உள்ளார். தற்போது ரஜினியும் அமெரிக்கா செல்லவுள்ளதால் மகள் ஐஸ்வர்யா உள்ளிட்ட குடும்பத்தினரும் இணைந்து கொள்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
