தமிழ்நாடு

கிரிக்கெட் வீரர் தோனியை நேரில் சந்தித்த திமுக மூத்த தலைவர் !

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் முதல்முறையாக இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளாருமான துரைமுருகனும் சென்றுள்ளார். ஸ்டாலின் டெல்லி செல்வதற்கு முன்னதாகவே அங்கு சென்ற துரைமுருகன் தலைமையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Image
Image

இதை தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்த ஸ்டாலின், இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் இன்று டெல்லியில் இருந்து தமிழகம் திரும்புகிறார்.

இதனிடையே, நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளாருமான துரைமுருகன் கிரிக்கெட் வீரர் தோனியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும் உடனிருந்தார்.