சினிமா

மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை… 14 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார்…

தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர்களின் நீண்ட பட்டியலை மலையாள நடிகை ரேவதி சம்பத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டள்ளார்.

சமூக ஆர்வலர், உளவியல் நிபுணர், நடிகை என பன்முகம் திறன் கொண்டவர் ரேவதி சம்பத் (27). இவரது வாஃப்ட் என்ற குறும்படம், சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாக வெளியிடப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு பட்நாகர் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக அறிமுகமானார். இந்த நிலையில், தனக்கு பாலியல் தொல்லை அளித்தவர்கள் என 14 பேரின் பட்டியலை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 14 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, இவர்கள் எனக்கு பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாக உணர்வு ரீதியாக துன்புறுத்தியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ராஜேஷ் தொச்சிவர், நடிகர் சித்திக், போட்டோகிராபர் ஆஷிக் மகி, நடிகர் சிஜு, கேரள பேஷன் லீக் நிறுவனர் அபில்தேவ், டாக்டர் அஜய் பிரபாகர், எம்.எஸ்.பாதுஷ், இணையத்தில் கேலி செய்தவர் சவுரப் கிருஷ்ணன், நந்து அசோகன், மேக்ஸ்வெல் ஜோஸ், விளம்பர இயக்குநர்கள் நஷானூப் கர்வத் – சாக்கோஸ்,ராகேந்த் பை, சாருன் லியோ, பூந்துரா போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பினு என நடிகை ரேவதி சம்பத் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரேவதி சம்பத்தின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. விளம்பரத்துக்காக செய்யப்பட்டுள்ளதாகவும் ரேவதி மீது புகார் அளியுங்கள் என்றும் சிலர் கருத்துகூறியுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் சித்திக் மீது, பாலியல் குற்றச்சாட்டை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. நடிகை ரேவதியின் அந்த பதிவுக்கும் அப்போது எதிர்ப்பும் ஆதரவும் எழுந்தது. இந்தநிலையில் தனக்கு அநீதி இழைத்தவர்களின் நீண்ட பட்டியலை ரேவதி சம்பத் வெளியிட்டுள்ளார்.