ஓபிஎஸ்தான் என் சாய்ஸ்! சசிகலாவின் ஆடியோ அரசியலால் அலறும் அதிமுக!
சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசிய ஆடியோ சில வாரங்களாகவே வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில்… அவர்களில் 15 பேரை திடீரென அதிமுகவில் இருந்து நீக்கி கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் நேற்று சசிகலாவின் இன்னொரு ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியைச் சேர்ந்த சிவனேசன் என்ற அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசும் ஆடியோவில், ‘இனி என் முதுகில் குத்த இடமே இல்லை’என்று குறிப்பிட்டுள்ளார்,
ஓபிஎஸ்சைதான் நான் முதல்வராக தொடர வைக்க நினைத்திருந்ததாகவும் ஆனால் அவராகவேதான் ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தேனி சிவனேசனிடம் சொல்லியிருக்கிறார் சசிகலா.
“அந்த சமயத்துல அவருதானப்பா போனாரு… இல்லேன்னா அவரைத்தானே நான்…’என்று சிவனேசனுக்கு பதில் சொன்ன சசிகலா தன்னுடன் பேசிய தொண்டர்களை கட்சியை விட்டு நீக்கியதையும் கண்டித்துள்ளார்.
“என்னோட பேசுறாங்க, நீங்க வாங்கம்மானு கூப்பிடுறாங்கன்றதுக்காக கட்சிக்காரவுங்களை கட்சியிலேர்ந்து எடுத்தீங்கன்னா, ஒருத்தர் ரெண்டு பேர் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகடா ஆக்குறதா? இது கட்சி நடத்துறவங்களுக்கு அழகா? தொடர்ந்து இந்த கட்சிக்கு விசுவாசமா உழைச்சது தப்பா? எனக்கு பாத்தீங்கன்னா… முதுகுல குத்திக் குத்தி இனிமே குத்துறதுக்கு முதுகுல இடமே இல்லை. ஆனா இப்ப தொண்டர்கள் முதுகுலயும் குத்தினா அதை வேடிக்கைப் பாத்துக்கிட்டு இருக்க முடியுமா? கட்சிய காப்பாத்த நான் கண்டிப்பா வருவம்ப்பா. தொண்டர்கள்தான் எனக்கு முக்கியம். நான் வரவேண்டியதுக்கான நேரம் வந்துடுச்சு” என்று அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார் சசிகலா.
இதன் மூலம் சசிகலா தனது அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தத்தில் இருப்பது தெரிகிறது. அதாவது. தனது “ தனது ஆபரேஷனுக்கு ஓபிஎஸ் சின் ஆதரவை சசிகலாவும் முக்கியத் தேவையாக கருதுகிறார் ”என்றும், அதே நேரம் எடப்பாடியும் ஓபிஎஸ்சை கைவிட விரும்பவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல், ” தான் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதே துணைத் தலைவர் பதவியை பன்னீருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் எடப்பாடி. அப்போதுதான் பன்னீரை மையமாக வைத்து சசிகலா வேறு ஏதும் திட்டம் போட முடியாது என்றும் கருதினார் எடப்பாடி. அதனால்தான் சொன்னபடியே ஓபிஎஸ் சை சம்மதிக்க வைத்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்கச் செய்துவிட்டார். இந்த நிலையில்தான், “நான் ஓபிஎஸ்சைதான் முதல்வர் பதவியில் தொடர வைக்க நினைத்திருந்தேன். ஆனால் அவராகவே போய்விட்டார்”என்று இப்போது கூறியுள்ளார் சசிகலா.
இதன் மூலம் பன்னீருக்கு வெளிப்படையான தூண்டிலை வீசியிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் தூண்டிலில் சிக்கப் போவது பன்னீர் என்னும் மீனா, வெறும் பாசிதானா என்பதற்கு இன்னும் சில வாரங்களில் விடை கிடைத்துவிடும் என எதிர்பார்க்கலாம்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, ஜெயலலிதாவிடம் நல்ல நட்புடன் இருந்த புகழேந்தி அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கியது தான் இந்த வார ஹைலைட்டா இருக்கு. அதே சமயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி அவர்களும் எதிர்மறை விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார்.
அதில் சில…
ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தாலும், சாதிப்பது இபி எஸ் தான்
இவ்ளோ நாளா முதல்வராக தானே இருந்தீங்க…. இப்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியாவது ஏற்றுக்கொள்ளலாமே என ஓபிஎஸ் நினைக்க, அதுவும் முடியாமல் போக,,,, இப்போது துணை தலைவர் பதவி தான்.. அதாவது சசிகலா ஆடியோ அரசியலில் ஒபிஎஸ் அவங்க பக்கம் போக கூடாது என்பதற்காகத்தான் இ.பி.எஸ் மாஸ் காட்டி இருக்கார்
அதுமட்டுமல்ல, சமீபத்தில் ஓபிஎஸ் , புகழேந்திகாக சப்போர்ட் செய்து, எப்படியும் கட்சியை விட்டு நீக்குவதற்கு அனுமதித்து இருக்க மாட்டார் என எதிர்பார்த்தால், அனைத்தையும் மீறி….. ஹாஸ்பிடல்ல கடைசி நேரத்துல சொல்ற மாதிரி ” எல்லாம் நம்ம கைய விட்டு போயாச்சு” – னு …. புகழேந்திக்கு போனில் ஆறுதல் சொல்லி இருக்கிறார் ஓபி எஸ்
நிலைமை இப்படி இருக்க …. சசிகலா அவர்களோ கொஞ்சம் கொஞ்சமாக வெகுண்டெழ தொடங்கி இருக்காங்க… அதாவது எடப்பாடியை ஒரு கட்டம் கட்ட முடிவு எடுத்து, கொஞ்சம் கொஞ்சம் ஆடியோ மூலமாக ஹிண்ட்ஸ் கொடுக்க தொடங்கி இருக்காங்களாம்.
தமிழகத்தை பொறுத்த வரையில் எதிர்க்கட்சி என்றலே மக்களுக்கு “நல்லதே செய்தாலும்” எதிர்ப்பது தான். ஆனால், திமுக தலைமையிலான அரசு டாஸ்மாக் ஓபன் செய்ய அனுமதி அளித்த போது, அதிமுக பெரிசா ஒரு ரியாக்ஷனும் செய்யல என்பது தான் வேடிக்கையே …. காரணம், சென்ற அதிமுக ஆட்சியின் போது மதுக்கடை திறக்க அனுமதி என்ற அறிக்கை வந்த உடன் , திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்தனையும் செய்திகளில் வருவதற்கு முன்னரே, அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து FACEBOOK , YOUTUBE லைவ் எல்லாம் கொடுத்தாங்க…. ஆனால் இப்ப அதே வேலையை திமுக செய்யும் போது அதிமுக பெரிய அளவில் எதிர்க்கவில்லை.மாறாக பாஜாக மாஸாக எதிர்ப்பு தெரிவித்தாங்க. இதை வைத்து பார்க்கும் போது எதிர்க்கட்சி அதிமுகா வா ? பாஜகா ? என சிந்திக்க கூடிய அளவுக்கு தான் இருக்கிறது அதிமுகவின் செயல்பாடுகள்.
சரி … இதுல சசிகலா எங்கே வந்தாங்கனு யோசிக்க வைக்கும் அல்லவா? ..அதாவது, பாஜக வை பொறுத்தவரையில் யாருடன் கூட்டணி வைத்தாலும் அவர்களை விட ஒரு படி மேலே செல்ல அனைத்து முயற்சியும் எடுப்பார்கள். ஆக… தமிகத்தில் ஒரு திராவிட கட்சிக்கு தேய்மானம் வர வாய்ப்பும் இருக்கு. பாஜக மென்மேலும் வளர வாய்ப்பு பிரகாசமாகவும் இருக்கு.
இப்படியான நிலையில் தான் சசிகலா அவர்கள் கட்சியை காப்பாற்றும் போரில் ஆடியோ அரசியலை உட்புகுத்தி, யாருக்கோ செக் வைக்கிறாராம். இதனால் அதிமுக தலைமை அலறி போயி இருக்காம்.
