Covid19உலகம்

அமெரிக்காவில் 6 லட்சத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை…! அமெரிக்க மக்களுக்கு ட்விட்டர் பதிவு மூலம் ஆறுதல் தெரிவித்த அதிபர் பைடன்!

கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்று அமெரிக்காவில் பல உயிர்களை பாரபட்சமின்றி வேட்டையாடியது .அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது .

இந்நிலையில் நோய் தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

How deadly is the coronavirus? The true fatality rate is tricky to find,  but researchers are getting closer

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறியதாவது :

கொரோனாவிற்கு இத்தனை உயிர்களைக் பலி கொடுத்திருப்பது தனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருவதாகக் கூறினார். மேலும், நம் அன்பிற்குரியவர்களை இழந்திருப்பது மீள முடியா துயரைத் தந்தாலும், அவர்களது நினைவுகள் எப்போதும் நம்முடன் இருக்கும் என்று ஆறுதல் கூறியுள்ளார்.

U.S. sets new single day record for COVID deaths. - The Mind Shield

அமெரிக்காவில் கொரோனா இறப்பு எண்ணிகை 6 லட்சத்து 12 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்தைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது . அமெரிக்க மக்களான உங்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வருவதற்கு முன் உங்களுடைய உதடுகளில் புன்னகையை கொண்டு வரும் காலமும் வரும் என்று அவர் பதிவிட்டு உள்ளார்.