இந்தியா

கொரோனா காலத்தில் அரசு அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் தேவையா? தெலங்கான முதல்வருக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

தெலங்கானா அரசு 40,000 கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சொகுசு கார்கள் வாங்க வேண்டுமா என எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பினர். தெலங்கான அரசு உயர் அதிகாரிகள் பயணிப்பதற்காக சுமார் 11 கோடி ரூபாய் செலவில் 32 சொகுசு கார்களை மாநில அரசு வாங்கியிருப்பதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அரசு உயர் அதிகாரிகள் பயணிப்பதற்காக, 32 கார்களை வாங்க உத்தரவிட்டார். ஒரு காரின் விலை சுமார் 25 முதல் 30 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் 32 கார்களின் மொத்த விலை சுமார் 11 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

தற்போது கொரோனா பேரிடருடன் போராடிக் கொண்டிருப்பதுடன், 40 கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிரக்கும் இந்த நேரத்தில் சொகுசு கார்கள்தான் வாங்க வேண்டுமா என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கொரோனா பேரிடர் காரணமாக நிதிநெருக்கடியில் சிக்கியும் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வரும் இந்த நேரத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்த முதலமைச்சர் சந்திரசேகர ராவின் இந்த செயலை பாஜக கண்டித்துள்ளது.