அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது ஏன் ? விளக்கம் அளித்த முதலவர்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் போலி மது கள்ளச்சாராயம் மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் மீண்டும் உத்தரவு திரும்ப பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய தமிழக முதல்வர் கூறிருப்பதாவது :

மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை அறவே தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் . முழு ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றிய மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

கொரோனா பரவலுக்கு இன்னும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை எனினும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என மக்கள் அலட்சியமாக சுற்றித்திரிய வேண்டாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் .

பல்வேறு எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் போலி மது கள்ளச்சாராயம் மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் மீண்டும் உத்தரவு திரும்ப பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் விரைவில் பொது போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.