கள்ளச்சாராய விற்பனையை தடுக்க மதுக்கடைகளை திறந்துதான் ஆக வேண்டும்..! குடிமகன்களுக்கு நண்பனான ப.சிதம்பரம்!
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க ஒரே வழி மதுக்கடைகளை திறப்பது தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறிருப்பதாவது :
நாடு முழுவதும் மது அருந்தும் பழக்கம் மக்கள் மத்தியில் பரவிவிட்டது. தமிழகம் அதற்கு விதிவிலக்கல்ல . பல இடங்களில் சில பெண்கள் கூட மது அருந்துகிறார்கள். ஆனால் நான் மது அருந்துவது கிடையாது. அதனால் மது அருந்துபவர்களை கெட்டவர்கள் என்றும் சொல்ல முடியாது.

மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் அதிகளவில் பெருகிவிடும். இதனை யாரும் மறுக்க முடியாது. எனவே கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டுமென்றால் மதுக்கடைகளை திறந்துதான் ஆக வேண்டும் என கூறினார் .
