Covid19உலகம்

பிறப்பிடத்தை மீண்டும் எட்டிப்பார்க்கும் கொரோனா வைரஸ்…! சீனாவில் 35 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி!

கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்றின் பிறப்பிடமான சீனாவில் புதிதாக 35 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில், யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்று கண்டறியப்பட்டது.

Some coronavirus patients in Japan in serious condition, sources say | The  Japan Times

இந்நிலையில் ஒரு சில மாதங்களில் வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக சீன அரசு அறிவித்தது. ஆனால், வருடத்திற்கு மேலாகியும் இந்த பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் முழுமையாக விடுபடவில்லை. குறிப்பாக, பெருந்தொற்றின் 2வது மற்றும் 3வது அலையால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Coronavirus: China's Hubei to relax lockdown measures

இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் வைரஸ் தொற்று எட்டிப்பார்க்க துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 35 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.