தமிழ்நாடு

திமுக அரசின் மெத்தனத்தால் அழுகும் நெல் மூட்டைகள்… விவசாயிகள் வேதனை…

விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட நெல்மூட்டைகள் திறந்தவெளியில் பராமரிப்பில்லாமல் இருப்பதால் நெல்மணிகள் முளைத்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த அதிமுக அரசில் குடிமராமத்து பணி சிறப்பாக நடைபெற்றதால், அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் நெற் பயிர் விளைச்சல் அமோகமாக உள்ளது. இவ்வாறு பயிரிடப்பட்டு அறுபடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் விளைவித்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யப்படாத நிலை உள்ளது. அவ்வாறு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டாலும், மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள தோப்பூர் தமிழ்நாடு உணவு பொருள் கிடங்கில் பராமரிப்பின்றி இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக, நெல்மணிகள் அனைத்தும் முளைக்க ஆரம்பித்துள்ளது. விவசாயிகள் அறுவடை செய்து வைத்த நெல்லை, கொள்முதல் செய்ய திமுக அரசு முன்வராதது வேதனை அளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.