டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..! முழு விவரங்கள் இதோ !
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் முறையாக பயிற்சி பெற்று அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே டிரைவிங் லைசென்ஸ் வாங்க முடியும் என மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது .
இந்தியாவில் வண்டிகளை ஓட்ட தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆசைக்காக உரிய அதிகாரிகளுக்கு அன்பளிப்பு கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக்கொள்கின்றனர். இதனால் வண்டியை ஓட்ட தெரியாமல் ஓட்டி பல விபத்துகள் அரங்கேறியுள்ளன . இதை பற்றிய காட்சிகளை நாம் நிறைய திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது

மத்திய அரசின் புதிய விதிமுறைகள் :
- ஓட்டுநர் பயிற்சி மையங்கள் உயர்தர பயிற்சி வழங்குவதற்காக பிரத்தியேக ஓட்டுநர் சோதனை தடங்களை அமைத்திருக்க வேண்டும்.
- இந்தியாவின் மோட்டார் வாகன சட்டம் 1988 இன் கீழ் தேவையான போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கற்று தர வேண்டும்.
- ஓட்டுநர் பயிற்சி மையங்களில் முறையாக பயிற்சி பெற்று அதில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை வைத்திருப்பவர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது ஆர் டி ஓ அலுவலகம் வந்து வாகனத்தை ஓட்டி காட்ட அவசியம் இல்லை

மத்திய அரசின் இந்த புதிய நடைமுறைகள் ஜூலை 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
