அரசியல்தமிழ்நாடு

தயாநிதி, சேகர்பாபு, அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை எடுங்கள்… எல். முருகன் வலியுறுத்தல்…

தமிழக அரசின் கட்டுப்பாட்டை மீறி ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களை அரசு குழப்பக்கூடாது என்றார். ஏற்கனவே இருக்கும் நடைமுறையில் இருப்பதை வைத்து மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என்றார்.

ஊரடங்கு விதிமுறைகள் அமலில் உள்ளபோது, ஒரே ஆட்டோவில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மூன்று பேராக பயணம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றார். செங்கல்பட்டு, குன்னூர் பகுதியில் உள்ள தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க பயனுள்ளதாக இருக்குமா என்பதை ஆராய்ச்சியாளர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

கொரோனா தடுப்பூசி பயத்தை காங்கிரஸ்தான் ஏற்படுத்தியது. ஆனால் இன்று தடுப்பூசி தொடர்பாக விமர்சனத்தை சிதம்பரம் வைப்பது ஏற்க கூடியதாக இல்லை என்றும், தேவையான அளவு தடுப்பூசியை மத்திய அரசு உற்பத்தி செய்து வருவதாகவும் எல். முருகன் தெரிவித்தார்.