தாய்மார்களுக்கு அறிவித்த ரூ.1000 என்னாச்சு? மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி…!
தாய்மார்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது என்ன ஆனது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், தாய்மார்கள் அனைவருக்கும் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் அதைப்பற்றி எந்தவித அறிவிப்பும் வரவில்லை என்றார். ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுக கூறிய நிலையில், தாய்மார்கள் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த மே மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் தாய்மார்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. எனவே திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், மாதம் மாதம் ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்று கூறிய அவர், கடந்த மே மாதத்திற்கான ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, எல் முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில், திமுகவின் பொய்யான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றா? என்றும் இரண்டு ஏக்கர் நிலம் போல் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்றும் பொதுமக்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைக்கப்படும் என்றும் மீனவர்களுக்கு 8000 ரூபாய் வழங்கப்படும் என்றும் கொரோனாவில் இறந்த மருத்துவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. திமுக கூறிய வாக்குறுதி பொய்யானதா? என்று பொதுமக்களும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
