திருமணநாள் அன்று போதையில் தடுமாறிய மணமகன்… மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு…
திருமணநாளின்போது குடித்துவிட்டு மணமகளை நடனமான அழைத்ததால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் 22 வயது இளம் பெண் ஒருவருக்கு, ஹசீனா எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா காலமாதலால், திருமணம் சாதாரணமாக நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது நடைபெற்ற மெழுகுவர்த்தி ஒளிரச்செய்யும் நிகழ்ச்சியின்போது, மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் அதிகளவில் குடிபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
திருமணம் நாள் அன்றே மணமகன் அதிக குடிபோதையில் தடுமாறியுள்ளார். இதைக் பார்த்த மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டுமல்லாமல் மணமகளை தன்னுடன் நடனமாட மணமகன் அழைத்துள்ளார். மேலும் மணமகனின் உறவினர்கள் சிலர் மணமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்துமாறு குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டார். உடனடியாக மணமகளின் சொல்லைக் கேட்டு திருமணத்தை அவர்கள் நிறுத்தினர். பின்னர், மணமகன் குடும்பத்திற்கு மணமகள் குடும்பத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் பரிசுகள் அனைத்தும் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
மணமகளின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணமகனின் குடும்பத்தினர், காவல் துறையின் உதவியை நாடியுள்ளனர். காவல் துறையினர் எவ்வளவோ சமாதானம் கூறியும், திருமணத்தை நிறுத்தியாக வேண்டும் என்ற மனநிலையில் மணமகளின் குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர். மணமகன் மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக காவல் துறையிடம் மணமகள் குற்றம் சாட்டியதை அடுத்து, காவல் துறையினர் மணமகன் குடும்பத்தினரிடம் பேசி, மணமகள் குடும்பத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட நகை உள்ளிட்டவைகளை திருப்பி கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
