அரசியல்தமிழ்நாடு

தி.மு.கவின் சீனியர் அமைச்சரே நீங்களே இப்படி செய்யலாமா…! ஊரடங்கு எல்லாம் ஊருக்கு மட்டும்தான் என நிரூபித்த திமுக நிர்வாகிகள்!

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நலத்திட்டம் என்ற பெயரில், தமிழக அமைச்சரே, 700 பேருக்கு மேல் மக்கள் கூட்டத்தை கூட்டியது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி, கருமண்டபத்தில், 45வது வார்டு தி.மு.க சார்பில், 1,500 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு பங்கேற்று, அப்பகுதியினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தி.மு.க நிர்வாகிகள் 200 பேர் என, 700க்கும் மேற்பட்டோர் எந்த வித தொற்று பயமின்றி பங்கேற்றனர்.

latest tamil news

நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற நிபந்தனைகளை பின்பற்ற வலியுறுத்தியும், நலத்திட்ட உதவிகள் வாங்கும் போது, மக்கள் சமூக இடைவெளியை மறந்து, முண்டியடித்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.பல கட்சி நிர்வாகிகள் முக கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை.

மக்கள் அதிகம் கூடினால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் தான், தமிழக அரசு ஊரடங்கை அறிவித்து, பொது போக்குவரத்தை ரத்து செய்து, வீடுகளுக்கே காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், அதையெல்லாம் மறந்து, தி.மு.கவின் சீனியர் அமைச்சரான நேருவே, இவ்வளவு கூட்டத்தை திரட்டியது, அதிகாரிகள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

.நலத்திட்ட உதவிகள் கொடுக்க வேண்டும் என்றால்,யாருக்கும் இடையூறு இல்லாமல் கட்சியினர் மூலம் வீடு வீடாக சென்று கொடுத்திருந்தால் பாராட்டு பெற்றிருக்கும் என பலர் கூறி வருகின்றனர் .

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வரும் வேளையில், திருச்சியில் இப்படி பெருமளவில் மக்களை கூட்டத்தை கூட்டி நிகழ்ச்சி நடத்தியதும், அதை சீனியர் அமைச்சரே அனுமதித்ததும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது இதனால் தொற்று அதிகரிக்கும் சூழலும் ஏற்டபட்டுள்ளது .