அரசியல்தமிழ்நாடு

‘கொரோனா தடுப்பூசிக்கு சிபாரிசு’… திமுகவினர் அட்ராசிட்டி…!

தாங்கள் கூறுபவர்களுக்கே கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று திமுகவினர் கூறுவதால், சுகாதார துறையினர் திணறி வருகின்றனர். இதனால் பொதுமக்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுசாதார நிலையங்கள், தாய் – சேய் நல விடுதிகள், அரசு பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. தடுப்பூசி பெற வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் முண்டியடித்து தடுப்பூசிக்கான டோக்கன் பெற்று வருகின்றனர். பல இடங்களில் போலீசார் ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றன. இது ஒரு புறம் என்றால், திமுகவைச் சேர்ந்த சிலர், தடுப்பூசி போடுமாறு சுகாதார துறையினருக்கு சிபாரிசு செய்து வருகின்றனர். தற்போது கரூர் மாவட்டத்தில் தான் இந்த அவலம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக டோக்கன் பெற்றவர்களுக்கு அளிக்காமல், திமுகவினர் சிபாரிசு செய்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் டோக்கன் பெற்றவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

நேற்று காலை 5 மணி முதல் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் டோக்கனுடன் காத்திருந்தனர். ஆனால், மருந்து இல்லை என கூறியதை அடுத்து, டோக்கனுடன் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கரூர் மாவட்டத்தின் பல மையங்களில் டோகன் பெறாதவர்களுக்கு, திமுக நிர்வாகிகள் சிலர் தடுப்பூசி போடுமாறு சுகாதார துறையினருக்கு சிபாரிசு செய்கின்றனர். ஆளும் கட்சியினரின் உத்தரவை தட்டிக்கழிக்க முடியாமல் சுகாதார துறையினரும் விழிபிதுங்கியுள்ளனர். இதே போன்று நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் ஆளும் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.