‘தயா’ உங்க பேச்சு சின்னபுள்ளதனமா இல்ல இருக்கு… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்…
திமுக எம்.பி. தயாநிதிமாறன் கடந்த ஆண்டு பேசியது, தற்போது அவருக்கு எதிராகவே அமைந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்கும்படி மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதை அடுத்து, பல்வேறு தரப்பினர், நிதி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு, திமுக எம்.பி. தயாநிதிமாறன் நிவாரண நிதி குறித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்களிடம் நிவாரணம் கேட்பது பிச்சை எடுக்கும் மக்களிடம் பிச்சை எடுப்பது போல என்று அவர் கூறியிருந்தார். நாம் யாரைப்பற்றி எப்படி பேசுகிறோம் என்று தெரியாமல், பேசுவது சிலருடைய வழக்கம். அவ்வாறு கடந்த ஆண்டு தயாநிதிமாறன் பேசியது, தற்போது அவருக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்றும், என்ன தயா உங்க பேச்சு சின்னபுள்ளதனமா இருக்கு என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
