என் தொகுதியில் ஒரு உயிர் போகக்கூடாது அதிகாரிகளிடம் அதிரடி காட்டிய பனையூர் பாபு எம்எல்ஏ .
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் கொரோனா நோய் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் முறைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு அரசு அதிகாரிகளிடம் விரிவாக விவாதித்தார்…
செய்யூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் தேவையான உயிர்காக்கும் உபகரணங்கள் இருப்பு நிலை,மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதா? என்றும் அவரச தேவைக்கு வேண்டிய உபகரணங்கள் கையிருப்பு உள்ளனவா என்பனவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்…
குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் பேசி உடனடியாக நிவர்த்தி செய்து, செய்யூர் தொகுதியில் கொரொனா நோய் முற்றிலும் ஒழியவும், கொரோணா நோயினால் என் தொகுதியில் ஒரு உழிரிழப்பு கூட ஏற்படா வண்ணம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் பவுஞ்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டி ஒன்றை தொகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தனது சொந்த செலவில் ஏரம்மாள் அறக்கட்டளை சார்பாக வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஏ. இ.கங்காதரன் அவர்களிடம் வழங்கினார்.மேலும்,செய்யூர் அரசு மருத்துவமனை, சூணாம்பெடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு *ஆக்சிஜன் செறிவூட்டிகள் தலா இரண்டு வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.

முக கவசம் அணிவதன் அவசியம்,தடுப்பூசி யின் முக்கியத்துவம், கொரானா பரிசோதனை பற்றி அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள்,ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் ….
