இந்தியா

அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுவடைய இருக்கும் டவ்-தே புயல் – சென்னை வானிலை மையம்!

அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுவடையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

நாடே கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்றால் அவதிப்படும் நிலையில் தற்போது டவ்-தேவ் என்னும் புதிய புயல் உருவாகி உள்ளது.

இந்நிலையில் டவ்-தேவ் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் அதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுவடையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை.சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று – மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .