கொரோனா தடுப்பு பணிக்காக எஸ்.ஆர்.எம். குழுமம் சார்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி
தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது . இதனால் கொரோனா தடுப்பு பணிகளுக்கு இயன்றவர்கள் நன்கொடை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்பேரில் தொழில் துறையினர் சினிமா பிரபலங்கள் என பலர் கொரோனா நிவாரணத்திற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், எஸ்.ஆர்.எம் குழுமம் சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. எஸ்.ஆர்.எம். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணைவேந்தர் டாக்டர் சத்தியநாராயணன், எஸ்.ஆர்.எம். ராமாபுரம் கல்வி வளாக தலைவர் டாக்டர் சிவக்குமார், எஸ்.ஆர்.எம். குழுமத்தின் நிரஞ்சன் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதற்கான நிதியை அளித்தனர்.
