தமிழ்நாடு

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தரமான சாலைகள் போடவேண்டும் – இறையன்பு

தமிழகத்தில் புதிய சாலைகள் போடுவது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தமிழக தலைமைச் செயலாளர் வெ இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது : சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சாலைகள் போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் .

ஒவ்வொரு முறையும் சாலைகளை அமைக்கும் போதும் ஏற்கெனவே உள்ள சாலை மீதே புதிய சாலைகள் போடப்படுகின்றன. இதனால் சாலைகள் தரமில்லாதவையாக உள்ளன. மேலும் சாலைகளின் உயரம் அதிகரித்து வீடுகளின் உயரம் குறைகிறது. இதனால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதை உணர்ந்தே இறையன்பு இது போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.