Covid19இந்தியா

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை வழங்கலாம் – துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் ஆக்ஸிஜன் தேவையும் அங்கு குறைந்துள்ளது , எனவே கூடுதல் ஆக்சிஜன்களை, தேவைப்படும் பிற மாநிலங்களுக்கும் கொடுக்கலாம், என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் கூறியதாவது : “ஆக்ஸிஜன் தேவை குறைந்து, மருத்துவமனை படுக்கைகள் காலியாகி வருகின்றன. அந்த நேரத்தில் (15 நாட்களுக்கு முன்பு), எங்களுக்கு 700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. இப்போது, டெல்லிக்கான, ஆக்ஸிஜன் தேவை ஒரு நாளைக்கு 582 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது .

நாங்கள் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளோம், ஒரு நாளைக்கு 582 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனைக் கொண்டு எங்கள் பணிகள் செய்யப்படும் என்றும், டெல்லியின் ஒதுக்கீட்டிலிருந்து உபரி ஆக்ஸிஜனை மற்ற மாநிலங்களுக்கு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளோம்” மேலும், கொரோனா தொற்று இரண்டாவது அலையால் கொரோனா கேஸ் எண்ணிக்கை அதிகரித்தபோது, டெல்லி கடும் சிறப்பதுக்குள்ளாக்கியது அப்போது, ​​டெல்லி மக்கள் உதவிக்கு வந்தமைக்கு மத்திய அரசு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.