கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பால் குஜராத்தில் ஒருவார கால இரவு ஊரடங்கு நீட்டிப்பு
குஜராத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 6 லட்சத்து 93 ஆயிரத்திற்கு கூடுதலாக பதிவாகி உள்ளது. இதுவரை 5 லட்சத்து 48 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர். உயிரிழப்பு 8,511 ஆக உள்ளது.
மத்திய அரசு இலவச அடிப்படையிலான கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி டோஸ்களை அதிக அளவில் பெற்ற மாநிலங்களின் வரிசையில் 3வது இடத்தில் குஜராத் (1,48,70,490) உள்ளது.
கொரோனா பாதிப்புகளை குறைக்க தடுப்பூசிகள் பயன்படுத்திய போதிலும் தொற்று எண்ணிக்கை குறையாத சூழலில், குஜராத்தில் 36 நகரங்களில் ஒருவார காலத்திற்கு இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த உத்தரவானது வருகிற 18ந்தேதி வரை அமலில் இருக்கும்.
அரசின் இந்த புதிய உத்தரவின்படி, இன்றிரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் சூரத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட 36 நகரங்களில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு அமலில் இருக்கும்.
