அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கிடைக்காததற்கு இதுதான் காரணமா..?
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். இதனிடையே அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்கள் வெளியானது. அதன்படி தற்போது பட்டியல் வெளியாகியுள்ளது.
- துரைமுருகன் -நீர்பாசனத்துறை அமைச்சர்
- ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்
- கே.என்.நேரு -நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
- எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் – வேளாண்துறை அமைச்சர்
- பொன்முடி- உயர்கல்வித்துறை அமைச்சர்
- எ.வ. வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்
- தா.மோ அன்பரசன் – ஊரக தொழில்துறை அமைச்சர்
- கே.என்.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்- வருவாய்த்துறை அமைச்சர்
- தங்கம் தென்னரசு- தொழில்துறை அமைச்சர்
- முத்துசாமி- வீட்டுவசதித்துறை அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்- மீன்வளத்துறை அமைச்சர்
- வெள்ளக்கோயில் சாமிநாதன்- செய்தித்துறை அமைச்சர்
*ஆர்.எஸ்.ராஜக்கண்ணப்பன்- போக்குவரத்துறை அமைச்சர்
- ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்
- இளித்துறை க.ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்
- செஞ்சி மஸ்தான் – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
- செந்தில் பாலாஜி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர்
- அன்பில் மகேஷ் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
- கீதா ஜீவன்- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
- மனோதங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
- சு. முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர்
- அர. சக்கரபாணி – உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்
- கே ஆர் பெரிய கருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பெயர் அமைச்சரவை பட்டியலில் இல்லாததால் கழக உடன்பிறப்புகள் அதிர்ச்சியில் உள்ளனர் மேலும் முதல் முறை வெற்றி பெற்ற உடனேயே அமைச்சர் பதவி கொடுத்தாள் குடும்ப ஆட்சிக்கு இதுவே உதாரணம் என எதிர்க்கட்சிகள் கிளம்பிவிடுவார்கள் அதனால் 2,3 வருடங்கள் கழித்து உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.
