அரசியல்தமிழ்நாடு

பதவியேற்பு விழாவை அனைவரும் வீட்டிலிருந்து காணுங்கள் – ஸ்டாலின்

ஆளுநர் மாளிகையில் நாளை காலை நடைபெறவுள்ள (மே.7) திமுக தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவை அனைவரும் வீட்டிலிருந்தே காணுங்கள் என முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் : நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவை அனைவரும் வீட்டிலிருந்து காணுங்கள். தமிழகம் முழுவதும் தொண்டர்கள் அழைத்து பதவியேற்பு விழாவை நடத்த எண்ணியிருந்தேன். ஆனால் கொரோனா காலமாக இருப்பதால், அவ்வாறு மாபெரும் விழாவாக நடத்த இயலாது.

திமுக உடன்பிறப்புக்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கி முதல்வராக பதவியேற்க தயாராகி வருகிறேன். தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமஉரிமையும், கடமையையும் எண்ணி உயர்வான தமிழகமாக உருவாக்குவோம் என ஸ்டாலின் கூறினார்.