அரசியல்தமிழ்நாடு

பின்தங்கியிருக்கும் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வார் ஸ்டாலின்… திருநாவுக்கரசு புகழாரம்

2021 தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறது. பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் காங். தலைவர் திருநாவுக்கரசர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் தமிழக மக்களின் பேராதரவோடு முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லவும், அறந்தாங்கி தொகுதியில் 31ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ராமசந்திரனை வெற்றி பெற வைத்ததற்கு வாழ்த்துக்கள் பெறவும் வந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் செயல்படுவார். பல்வேறு பொறுப்புகளில் இருந்த ஸ்டாலின், ஆட்சியில் சிறந்த அனுபவம் மிக்கவர். தமிழகத்தை சிறந்த முதல்வராக வழிநடத்துவார். பின் தங்கி உள்ள தமிழகத்தை முன்னேற்ற பாதயில் அழைத்து செல்வார். ஊரங்கு காலத்தில் மக்களுக்கு உதவி தொகைகள் மற்றும் நிவாரண தொகைகள் வழங்குவதில் மத்திய அரசு உதவ வேண்டும். மருத்துவ வசதிகள் கிடைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உடனடியாக உதவ வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.