அரசியல்தமிழ்நாடு

அறிக்கை விடலாமா வேனாமான்னு யோசிக்க இவ்ளோ நேரமா…?ஓ.பன்னீர்செல்வம் அதிரடி

சம்பவம் முடிந்து தவறு செய்தவா்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்டு, அண்டை மாநிலங்கள் தொடங்கி அயல்நாடுகள் வரை பின்பற்றும், ஏழை எளியோரின் பசிப்பிணி நீக்கும் அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை சில திமுக உறுப்பினர்கள் அந்த உணவகத்தை சூறையாடும் காட்சிகள் இன்று காலையில் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கையில் திமுக தலைவர் ஸ்டாலினின் படத்தை வைத்திருந்ததால், இதில் ஈடுபட்டவர்கள் தி.மு.கவினர் என உறுதிசெய்யப்பட்டது.

இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால், அம்மா உணவகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார் திமுல தலைவர் ஸ்டாலின். மேலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாக சைதாப்பேட்டையில் வெற்றி பெற்ற மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சம்பவம் நடந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்ட பின் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைவிட்டிருந்தார். அதில் “அறிக்கை விடலாமா வேனாமான்னு யோசிக்க இவ்ளோ நேரமா ” என்று திமுகவை கேள்வி எழுப்பியிருந்தார். அந்த அறிக்கை சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.