தமிழ்நாடு

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 23 ஆம் தேதி உருவாகக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரம், சத்தீஷ்கர் உத்தரபிரதேசத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும், வடமேற்கு டெல்லி, ஜிந்த், ரோஹ்தக், கைதால், ரேவாரி, பவல், திசாரா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.