அரசியல்

தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்… அரசுக்கு கமல் ஹாசன் கோரிக்கை…

தமிழ் மொழிக்கு என தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆங்கிலத்தை தவிர பிறமொழிகள் ஆபத்தில் உள்ளது என்றும் தினம்தோறும் பிறமொழிகள் செத்துக் கொண்டிருப்பதாகவும் சாகாவாரம் பெற்ற தமிழ் தடுமாறிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கமல் ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும், தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாக பணியாற்ற வேண்டியது நம்முடைய வரலாற்று கடமை என குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில், கடுமையான முயற்சிக்குப் பிறகு தமிழ் மொழி செம்மொழி அங்கீகாரத்தை பெற்றுள்ளது என்றும், செம்மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் ஆங்கிலத்தை தவிர பிறமொழிகள் ஆபத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழி தடுமாறிக் கொண்டிருக்கிறது. ப்ரென்ச், ஆங்கில மொழிகளைப் பயிற்றுவித்து சான்றிதழ் வழங்கம் பல அமைப்புகள் உலகம் முழுவதும உள்ளது. ஆனால் தமிழ் மொழிக்கு இதுபோன்ற எந்த அமைப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் வளர்ச்சிக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும என கேட்டுக் கொண்ட கமல், வரும் பட்ஜெட் தொடரிலேயே தமிழுக்கென்றி தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.