முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறார்: அமைச்சர் பெரியகருப்பன்
தமிழகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்வதாக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் புகழாரம் சூட்டினார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வட்டம் ஒன்றில் அமைச்சர் பெரிய கருப்பன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதாக கூறினார். தமிழ்நாட்டின பொருளாதாரத்தையும் முன்னேற்றத்தையும் வளர்ச்சி பாதையில் எடுதது செல்வதாக அமைச்சர் புகழாரம் சூட்டினார்.
கொரோனா பேரிடர் காலத்தில் அனைத்து துறைகளும், ஒருங்கிணைத்து செயல்பட்டதாக கூறிய அவர், மருத்துவ துறைக்கு ஊர வளர்ச்சி துறையும் உதவியாக செயல்பட்டதாக தெரிவித்தார்.
முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுகிறது. தனது செயல்பாடுகளால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த முதலமைச்சர் என்றும் சிறந்த முதல்வர் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது போற்றுதலுக்கு உரியது என்றும் கூறினார்
காவல் துறை, வருவாய் துறை ன அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால்தான் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக கூறினார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஊரக வளர்ச்சிதுறை எப்படி நடைபெற்றதோ அவ்வாறு மீண்டும் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் வலியுறுத்தினார்.
