தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்ட தகவல்…
தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் நகர்ப்புற, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் செய்தியாளக்ரளைச் சந்தித்தார். தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றார். செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிருக்கு இட ஒதுக்கீடு போன்றவற்றில் குற்றச்சாட்டு உள்ளது என்றும் இந்த குற்றச்சாட்டக்களை கலைந்து இந்த ஆண்டுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊரகம், நகர்ப்புறம் என இரு வகையான உள்ளாட்சி அமைப்புகளில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. மீதம் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே கடந்த 2019 ஆம் ஆண்டு 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பல்வேறு காரணங்களால் தேர்தல் நடத்தப்படாத நிலையில், சிறப்பு அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வருகின்றனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், டிசம்பர் இறுதிக்குள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையின் ஒருநாள் குடிநீர் தேவை 1300 எம்.எல்.டியாக இருக்கிறது. 30 ஆண்டுகள் தேவையை கணக்கில் கொண்டுதான் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்தோம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
