ஊரடங்கு நீட்டிப்பு… உணவகம், தேநீர் கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி…
தமிழகத்தில் மேலும் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தற்போது 3 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா பரவல் இருந்து வருகிறது. இந்த நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் – கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணி வரை அத்தியவாசிய கடைகள் மூடப்பட்ட நிலையில் வரும் 12 ஆம் தேதி முதல் இரவு 9 மணி வரை கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து நோய் தட்டுப்பாட்டை தடுக்கும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற அரசின் தடை தொடர்ந்து நீடிக்கிறது.
