Uncategorized

2024 ஆம் ஆண்டுக்குள் உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகள்… மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்…

2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உலகத்தரத்திலான நெடுஞ்சாலைகள் அமைப்பதை இலக்காக நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சாலை மேம்பாடு குறித்த 16-வது ஆண்டு மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சர்வதேச அளவில் இந்தியா 63 லட்சம் கிலோ மீட்டர் சாலை கட்டமைப்புடன் 2-வது இடத்தில் உள்ளது என்றார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு பெரும்பங்காற்றுகிறது என்றும் எனவே சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு 105 லட்சம் ரூபாய் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உலகத்தரத்திலான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

2024 ஆம் ஆண்டுக்குள் உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையின் 60 ஆயிரம் கிலோ மீட்டர், ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்ர் என்ற விகிதத்தில் நிர்மாணிப்பது தனது நோக்கம் என்றார். இதை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.