அரசியல்தமிழ்நாடு

நீட் விவகாரத்தில் தமிழக பாஜக இரட்டை நிலைப்பாடு… அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு…

நீட் தேர்வு குறித்த ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உகள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், நீட் தேர்வு தொடர்பாக பாஜக நிலைப்பாடு பற்றிய கருத்தை எதிர்கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு பற்றிய அதிமுகவின் கருத்தை, எதிர்கட்சி தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றார். நீட் தேர்வால் ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பு என்பது தொடரந்து இருந்து கொண்டிருக்கிறது என்றும், பயிற்சி மையங்களில் பெரிய அளவிலான கட்டண வசூல் செய்யப்படுவதாகவும், வசதியற்ற நிலையில் உள்ள மாணவர்கள் பயிற்சி மையங்களுக்கு போக முடியாத சூழல் உள்ளதாக கூறினார். மாணவ சமுதாயத்தைக் காப்பதற்கும், பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கம்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழு அமைத்து சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக போராடி கொண்டிருப்பதாக கூறினார். ஆனால், பாஜக தமிழக மாணவர்களின் நலனை குழிதோண்டி புதைக்கின்ற வகையிலான நடவடிக்கையை வெளிப்படுத்தி வருவதாக கூறினார்.

ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவில் மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. 7.5. சதவிகிதம் வருவதற்கு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. 10 சதவிகிதம் கொண்டு வர வேண்டும என்றோம். தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் கூட ஆளுநர் மாளிகையில் 45 நாட்கள் கிடப்பில் கிடந்தது. திமுகவின் முயற்சியால் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்ததாக கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி பிரமாண பத்திரமாக ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.