அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது..! அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி!

தமிழகத்தில் ஆட்சியமைத்திருக்கும் திமுக அரசுக்கு மின் தடை தொடர்பான புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததே மின் தடைக்கு காரணம் என்றும் இது கூடிய விரைவில் சரிசெய்யப்பட்டு விடும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

திமுக ஆட்சி காலத்தில் மின் உற்பத்திக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை அதிமுக ஆட்சிகாலத்தில் வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது .

இந்நிலையில், தடையில்லா மின் விநியோகம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார் .

அப்போது இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது :

கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், , நிதி இழப்பு, சுய உற்பத்தி குறைவானது ஏன் என்பதெல்லாம் ஆய்வு செய்து தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றப் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், புதிய மின் இனைப்பு கோரி விண்ணப்பைத்தால், உடனடியாக இணைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் கூடாது எனவும் மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.

கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய பராமரிப்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது. மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மட்டுமே நடைபெறும்” என்று உறுதி அளித்தார்.