குற்றம்தமிழ்நாடு

ஜி.பி.முத்து, பேபி சூர்யா உள்பட 4 பேர் ஆபாச பதிவுகளை இடுவதாக புகார்…!

யூடியூப்-ல் ஆபாச பதிவுகளை வெளியிடுவதாக ஜி.பி.முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகியோர் மீது ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர்கள் மீது எந்தவித புகாரும் வரவில்லை என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த ஒருவர், ஜி.பி.முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்கந்தர் ஆகியோர் மீது புகார் கூறியதாக கூறப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசியும், சிறார்களை சீரழிக்கும் வகையில் யூடியூபில் ஆபாச பதிவுகள் வெளியிட்டு வருவதாகவும், இதுபோன்ற இணையதளங்களைக் கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் ஜி.பி.முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்கந்தர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், ராமநாதபும் காவல் கணிகாணிப்பாளர் கார்த்தி, ஜி.பி.முத்து உள்ளிட்டவர்கள் மீதான புகார் எதுவும் தனது கவனத்துக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.