“இல்லை இல்லை” என்ற சொல்லை இல்லாமல் ஆக்கியிருக்கிறோம்… சட்டப்பேரவையில் முதல்வர் பெருமிதம்…
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில்தான் ஆட்சிக்கு வந்தோம். இல்லை இல்லை என்ற சூழலை தற்போது இல்லாமல் ஆக்கியிருக்கிறோம் என்று கூறினார்.
கொரோனா தடுப்பு பணி நடவடிட்ககையில், திமுக ஆட்சிக்குப் பிறகு, புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டன. ஆக்சிஜன் வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டன. கொரோனா 3 ஆம் அலை வரக்கூடாது என்று கூறிய முதல்வர், அவ்வாறு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி அரசுக்கு உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் பரவலை முந்தைய அதிமுக ஆட்சியில் கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். கொரோனாவைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்றும் மருந்து இல்லை என்றும், மருத்துவர்கள் இல்லை என்றும் கூறி வந்தார். அதற்காகத்தான் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தினோம் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினால் கலந்து ஆலோசிக்க முடியும் என்று வலியுறுத்தி இருந்தோம் என்றார்.
அனைவரும் ஓருங்கிணைந்து செயல்பட்டு கொரோனாவுக்கு, தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என்று உறுதியுடன் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என ஊடகங்களில் பலர் வருத்தம் தெரிவித்ததாக முதல்வர் கூறினார்.
