8 வழிச்சாலைக்கு எதிரான போராட்ட வழக்குகள் வாபஸ்… முதல்வர் அறிவிப்பு…
மீத்தேன், நியூட்ரினோ, சேலம் 8 வழிச்சாலை, குடியுரிமை சட்டத்திற்காக அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றன. சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி வருகிறார். அப்போது பேசிய அவர், மீத்தேன், நியூட்ரினோ, 8 வழிச்சாலை, குடியுரிமை சட்டத்திற்காக அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றார். கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்றார். தமிழகத்தில் உள்ள சமத்துவபுரங்கள் சீராமக்கப்படும் என்றம் புதிதாக சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றார். மேலும், தமிழகத்தில் உள்ள கோயில்கள் புனரமைப்புக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
