9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை: தமிழக அரசு
செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி உள்ளிட்ட புதிதாக ஏற்படுத்தப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை 2021 செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று தமிழக அரசு கூறியுள்ளது. உள்ளாட்சி கூடுதல் அவகாசம் கோரி, நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் உள்ள தனி அலுவலர்களின் பதவி காலம் இம்மாதம் 30 ஆம் தேதி வரை நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில், 9 மாவட்டங்களில் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
