அரசியல்

பொருளாதார ஆலோசனைக் குழுவில் சமூக நீதி எங்கே? வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி…

பொருளாதார ஆலோசனைக் குழுவில், சமூக நீதி எங்கே என்று, சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்குவதற்காக ஐந்பேர் கொண்டு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்லா, அரவிந்த் சுப்ரமணியன், ஜூன், ட்ரெஸ் மற்றும் டாக்டர் எஸ்.நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த, உலக அளவில் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் குழுவிற்கு ரகுராம் ராஜன் தலைமை வகிக்க உள்ளார்.

பொருளாதார வல்லுநர் குழுவின் பரிந்துரைகள், மாநில வளர்ச்சிக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தமிழக அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக நீதி பேசக்கூடிய திமுகவில், சமூகநீதி எங்கே? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டரில், தமிழக அரசுக்கு ஆலோசனைச் சொல்லும் குழுவில் சமூக நீதி எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வானதி ஸ்ரீனிவாசனின் டுவிட்டர் பதிவுக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன.