அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்… ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்…
சென்னை தரமணி அருகே கல்லுக்குட்டை பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தங்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் குடிநீர் தொட்டிகளை அமைத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், காலி இடங்களை ஆக்கிரமித்து விற்பனை செய்ய திமுகவினர் முயன்றுள்ளனர். அதே பகுதியில் உள்ள திருவள்ளூர் நகரில் உள்ள சில இடங்களை போலி ஆவணம் மூலம் திமுகவினர் விற்பனை செய்துள்ளனர்.

இந்த நிலையில், கல்லுக்குட்டை பகுதியில் காலியான நிலம் மற்றும் அங்குள்ள குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்று திமுகவினர் அப்பகுதி மக்களை மிரட்டியுள்ளனர். மேலும் அதைச்சுற்றி வேலி அமைக்கவும் அவர்கள் முயன்றுள்ளனர். நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு வந்த திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் மணிகண்டன், ராஜலிங்கம், சத்யா ஆகியோர் அப்பகுதி மக்களிடம் தண்ணீர் தொட்டியை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்களிடம், உங்கள் வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துவிடுவோம் என்றும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட பெண்களை மிகவும் திமுகவினர் மிகவும் ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, ரமேஷ் மணிகண்டன், ராஜலிங்கத்தை அடித்து விரட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களை சமாதானம் பேச முயன்றும் அது பலனளிக்காமல் போனது. பொதுமக்கள் அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பியோடியுள்ளனர். கல்லுக்குட்டை திமுக நிர்வாகிகள் வெங்கடேசன், கதிர் உள்ளிட்டோர் சேர்ந்த அந்த பகுதியில் உள்ள பொதுவான புறம்போக்கு இடங்களைத் தேர்ந்தெடுத்து அதில் குடிசை போட்டு, அப்பாவி மக்களை ஏமாற்றி அந்த இடத்தை விற்பனை செய்து வருவதாகவும், புதிதாக வீடு கட்டுபவர்களிடம் பணம் கேட்பது இதேபோல் சாலையோர கடைகளில் பணம் கேட்பது உள்ளிட்ட அராஜக செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற திமுகவினர் ரமேஷ் மணிகண்டன், ராஜலிங்கம், சத்யா உள்ளிட்டோர் மீது அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை விசாரித்து வருகின்றனர். விடியல் தருவதற்காக வந்த திமுகவினரை, பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.
