தமிழ்நாடு

கொரோனாவை முழுமையாக தடுக்க மக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும்…! மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றை முழுமையாக தடுக்க மக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி மையத்தை ஆய்வு மேற்கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் நேற்று மட்டும் அதிகபட்ச எண்ணிக்கையாக 3 லட்சத்து 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Over 25,000 COVID-19 Vaccine Doses Go Waste In Tamil Nadu Due To Low Turnout

தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் கொரோனா இல்லாத 355 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தடுப்பூசி மட்டுமே நிரந்தர தீர்வு எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.