அரசியல்தமிழ்நாடு

அதிமுகவில் சசிகலாவா? வாய்ப்பே இல்லை: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

கடந்த சில தினங்களாக அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரான கே.சி.வீரமணி, அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வீரமணி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சரை மீண்டும் கட்சியில் சேர்க்க தலைமைதான் முடிவு செய்யும் என்றார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை. அதிமுக தொண்டர்களுடன் பேசுவதாக சசிகலாவின் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. அது முழுவதும் பொய்யான செய்தி என்றும் எந்த நிலையிலும் உண்மையான செய்தி அல்ல என்றார்.

சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியுள்ளார் என்றும் அவரை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என கட்சி தலைமையே முடிவி செய்துவிட்டதாக கூறினார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கட்சியில் எந்த சலசலப்புக்கும் இடமில்லை. இது அதிமுகவின் கோட்டையாகத்தான் உள்ளது என்று கே.சி.வீரமணி கூறினார்.