Uncategorized

பரட்டை தலையுடன் பொன்னியின்செல்வன் பட கெட்டப்பில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் கார்த்தி !

உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி இன்று வரை போராடிவருகிறது.இன்று வரை கொரோனாவின் தாக்கத்தால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு பலர் இறந்து போய்யுள்ளனர் . இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை அதிகளவில் இழந்துள்ளது தான் .

இன்றைய சூழலில் கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பல மருத்துவ விஞ்ஞானிகள் பல நாட்கள் போராடி கண்டு பிடித்த கொரோனா தடுப்பூசி தான் ஒரே வழி . அந்த வகையில் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள தற்போது ஆர்வம் காட்டி வருகின்றார்

தடுப்பூசிக்கான விழிப்புணர்வுகளை அரசு அதிகாரிகளும் திரைத்துறை பிரபலங்களும் முதலில் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அவற்றை புகைப்படம் எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அந்த வகையில் நடிகர் கார்த்தியும் பரட்டை தலையுடன் வந்து தனக்கான முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் இதனை அவர் ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார் .