முதலமைச்சர் நிவாரண நிதி : பா.ம.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கும்படி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதையடுத்து பா.ம.க. சார்பில் எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்குவார்கள் என்றும் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக திரட்டப்படும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வசதி படைத்த அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
