rationcardholers

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்வணிகம்

பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கம்.. இன்று அறிவிப்பு…

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியாக கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை தொகுப்பாக வழங்க, தமிழ்நாடு அரசு 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகுப்புகளை வழங்குவதற்கான டோக்கன்கள் பயனாளிகளுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வரும் 8 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில், பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் எவ்வளவு பணம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து முறையான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More