officerspromotion

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக நியமனம்…!

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு டிஜிபி ஆக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் இருக்கும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ள நிலையில் தமிழக அரசுப் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏடிஜிபியாக இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தற்போது டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதப்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏடிஜிபி சந்தீப் மிட்டலும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு சைபர் கிரைம் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், ஏடிஜிபி பால நாகதேவியும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சிபிசிஐடி ஐஜியான அன்பு உள்ளிட்டோர் ஏடிஜிபிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சிபிசிஐடி ஐஜி அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்மண்டல ஐஜியான பிரேம் ஆனந்த் சின்கா, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மகேஷ்வர் தயாள், சிறைத் துறையிலிருந்து மாற்றப்பட்டு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக உள்ள சங்கர், சிறைத் துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியான அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான அனிஷா உசேன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல சென்னை காவல் தெற்கு கூடுதல் ஆணையராக உள்ள என்.கண்ணன், கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வரும் சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக உள்ள பி.சரவணன், திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளன.

Read More