NEWMPs

அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கமல்ஹாசன், உள்ளிட்ட புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பிக்கள் இன்று பதவியேற்பு…

தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் உட்பட ஆறு மாநிலங்களவை எம்.பி.க்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, வில்சன், அன்புமணி ராமதாஸ், சண்முகம், என். சந்திரசேகரன், முகமது அப்துல்லா, ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதனிடையே கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி, இந்த 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் திமுகவை சேர்ந்த வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக சார்பில் களமிறக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வானார்கள். அதேபோல அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் உட்பட ஆறு மாநிலங்களவை எம்.பி.க்களும் இன்று பதவியேற்க உள்ளனர். முன்னதாக நேற்று பதவிக்காலத்தை நிறைவு செய்த வைகோ, அன்புமணி ராமதாஸ் உட்பட 6 எம்.பிக்களுக்கும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

Read More