madhurantagam

TVKஅரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

மதுராந்தகம், தாராபுரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு… தவெக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 109 ….

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவில், மதுராந்தகம் தொகுதியில் வென்ற அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் இணைந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அவர்களே மீண்டும் தவெக சார்பில் களமிறங்கினர். இம்முறை திமுகவும் அதிமுகவும் களத்தில் மிகவும் தீவிரம் காட்டின.
துராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவரும் எம்.எல்.ஏ-க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி, 20 ஆயிரத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுகவின் பரந்தாமன் 2-ம் இடமும் அதிமுகவின் கணிதா சம்பத் 3-வது இடமும் பிடித்தனர். இதனையடுத்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மரகதம் குமரவேல் தேர்தல் அதிகாரியிடம் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் வெற்றிபெற்ற தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமாவும் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலும் இன்று காலை சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர்.

Read More